வளாக செயல்பாடுகள்
வளாக செயல்பாடுகள்
பட்டங்கல பல்கலைக்கழகக் கல்லூரி (UCB), பங்குதாரர் உறவுகளை வலுப்படுத்தவும், மாணவர்களின் கற்கைநெறிசார்ந்த திருப்தியை மேம்படுத்தவும், அதன் நிறுவனம் சார் அபிவிருத்திக்கான உத்தியின் ஒரு பகுதியாக சமூகப் பொறுப்பை ஊக்குவிக்கவும் மாணவர்களை மையமாகக் கொண்ட மற்றும் சமூகம் சார்ந்த நிகழ்வுகளின் தொடரை ஏற்பாடு செய்தது.
Orates Battle 2025
சபரகமுவ மாகாணத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, இளைஞர்களின் நம்பிக்கை மற்றும் அறிவுசார் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில் தொடர்பாடல், தலைமைத்துவம் மற்றும் பொதுப் பேச்சுத் திறன்களை வளர்க்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
விராமய கலாச்சார நிகழ்வு
மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கான உணர்வுசார் மனநலம், கலாச்சார பாராட்டு மற்றும் இளைப்பாறல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஒரு கலாச்சார மாலைபொழுது ஏற்பாடு செய்யப்பட்டது; இது ஒரு சமநிலையான கல்விச் சூழலை ஆதரிக்கிறது.
டிராவலோ 2025
உலக சுற்றுலா தினக் கொண்டாட்ட்டத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டது; சுற்றுலா மற்றும் உபசாரணைத் துறைக்கான பட்டங்கல பல்கலைக்கழகத்தின் தயார்நிலையை வெளிப்படுத்துவதுடன், தேசிய சுற்றுலா பங்குதாரர்களுடன் உறவுகளை வலுப்படுத்துகிறது.
சிஹினயட்ட அத்வேலக்
பெருநிறுவன சமூக பொறுப்புசார் நலன்புரித்திட்டங்கள் மூலம் கல்வி சமத்துவம் மற்றும் சமூக சேவையை வளர்க்கும், க.பொ.த. (சா/த) மாணவர்களுக்கு கணித கருத்தரங்குகள் மற்றும் பள்ளி விநியோக கருவிகளை வழங்குதல்.































