• +94 362 235 570
  • ucbatangala@gmail.com
  • University College of Batangala, Panawala, Eheliyagoda.

உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள்

உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள்

பட்டங்கல பல்கலைக்கழகக் கல்லூரியானது நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு மாற்றங்களுக்குட்படுத்தப்பட்டு மாணவர்களின் கல்விக்கு உதவும் அமைப்பில் தனித்துவமான கற்றல் சூழலைக் கொண்டமைந்துள்ளது. கல்லூரியின் நன்கு அலங்கரிக்கப்பட்ட வகுப்பறைகள், மேம்படுத்தப்பட்ட ஆய்வு கூடங்கள் மற்றும் அனைத்துத் துறைகளிலும் கல்வி பயிலுகின்ற மாணவர்களின் கல்வித் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யும் அமைப்பிலான சகல வளங்களையும் உள்ளடங்கிய நூலகத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 

எமது இந்த  தொழில்நுட்பத்துடன் இணைந்த உட்கட்டமைப்பில் ஸ்மார்ட் வகுப்பறைகள், வளாகம் பூராகவும் WI-FI வசதிகள் மற்றுட் டிஜிட்டல் கற்றல் உபகரணங்கள் என்பன மாணவர்கள் சமீபத்திய தொழில்நுட்பக் கல்வியை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக அமைகின்றன எனலாம். 

அது மட்டுமன்றி மாணவர்களின் முழுமையான அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு, அதாவது பல்வேறுபட்ட இணைப்பாடவிதான மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முகமாக புத்தாக்க வசதிகளைக் கொண்ட விளையாட்டு மைதானங்கள் மற்றும் சிறப்பான முறையில் கட்டப்பட்ட கேட்போர் கூடங்கள் என்பவற்றை வழங்குகிறது. மற்றும் மாணவர்கள் எமது வளாகத்தில் உள்ள உணவகங்கள் மூலம்  ஆரோக்கியமான மற்றும் சுகாதார ஒழுங்குகளைப் பேணி தயார்படுத்தப்பட்ட உணவுகளை அனுபவிக்க முடியும். 

இந்த வளாகமானது இலகுவான அணுகல் மற்றும் பாதுகாப்பை மனதில் கொண்டு கட்டப்பட்டுள்ளது. லிஃப்ட் அனைத்து தளங்களையும் இணைக்கிறது.மேலும் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் வசதியான சூழலை உறுதி செய்வதற்காக வளாகம் முழுவதும் CCTV பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுகின்றன.