கேள்விகள்
கேள்விகள்
பதிவுசெய்ததும், மாணவர்கள் தங்கள் மாணவர் மாணவர் அடையாள அட்டை, சீசன் டிக்கெட்டுகள் மற்றும் பிற வசதிகளுக்கான அணுகலைப் பெறுவர்
பட்டங்கல பல்கலைக்கழகக் கல்லூரி, இன்றைய தொழில்களுக்குத் தேவையான நேரடித் திறன்கள் மற்றும் தொழில்முறைத்திறன்சார் அறிவை மாணவர்களுக்கு வழங்க வடிவமைக்கப்பட்ட பல்வேறு NVQ நிலை 5 மற்றும் நிலை 6 டிப்ளோமாத் திட்டங்களை வழங்குகிறது.
எமது தற்போதைய கற்கை நிகழ்ச்சித்திட்டங்களில் பின்வருவன அடங்கும்:
🔧 தொழில்நுட்பத் திணைக்களம்:
- கட்டுமானத் தொழில்நுட்பம்
நவீன கட்டுமானத் தொழிற்துறைசார் தரநிலைகளை பூர்த்தி செய்ய கட்டிட வடிவமைப்பு, கட்டுமான செயன்முறைகள் மற்றும் செயற்திட்ட முகாமைத்துவம் ஆகியவற்றில் திறன்களை வளர்த்துக் கொள்ளல். - அளவுசார் கணக்கெடுப்பு
கட்டுமானத் துறைக்கு அவசியமான கிரய மதிப்பீடு, கேளிவிமனு கோரல் மற்றும் ஒப்பந்த முகாமைத்துவ நுட்பங்களைக் கற்றுக்கொள்ளல்.
- வேளாண்மை இயந்திரங்கள்
விவசாய இயந்திரங்கள் மற்றும் நவீன வேளாண்மைத் தொழில்நுட்பங்களின் தொழிற்பாடு, பராமரிப்பு மற்றும் முகாமைத்துவத்தில் நடைமுறை பயிற்சி பெறல்.
🍳 முகாமைத்துவத் திணைக்களம்
- உபசரனை முகாமைத்துவம்:
வரவேற்பு அலுவலகம், மனைப் பராமரிப்பு, உணவு & பானம், சமையலறைத் தொழிற்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை முகாமைத்துவம் ஆகியவற்றில் ஆழமான வெளிப்பாட்டுடன் உல்லாச விடுதி மற்றும் உணவக முகாமைத்துவத்தில் தனக்கான தொழிற்துறையை கட்டியெழுப்புதல். - பயணம் & சுற்றுலா முகாமைத்துவம்
சுற்றுலாத்துறைத் தொழிற்பாடுகள், பயணத் திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறைச் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் உள்ள தொகுதிகள் மூலம் சுற்றுலாத் துறையை ஆராய்ந்து, சுதேச மற்றும் சர்வதேச வாய்ப்புகளுக்கு தங்களைத் தயார்ப்படுத்துதல். - நிகழ்வு முகாமைத்துவம்
புத்தாக்கம் மற்றும் தொழில்வாண்மையை மையமாகக் கொண்டு, எண்ணக்கருசார் அபிவிருத்தி முதல் நிகழ்வுக்குப் பிந்தையதான மதிப்பீடு வரை வெற்றிகரமான நிகழ்வுகளைத் திட்டமிடல், ஒழுங்கமைத்தல் மற்றும் செயற்படுத்துதல் ஆகியவற்றைக் கற்றல்.
பட்டங்கல பல்கலைக்கழகக் கல்லூரிக்கு (நுழைவுத் தேவைகள்) க்கு விண்ணப்பிக்கத் துகுதி பெற்றவர்கள் யாவர்?
விண்ணப்பதாரர்கள் பின்வருவனவற்றில் ஒன்றைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
விஞ்ஞானம், கலை, வணிகம் அல்லது தொழில்நுட்பப் பிரிவுகளில் க.பொ.த (உ.த) இல் தகுதி பெற்றிருத்தல். (பாடநெறியைப் பொறுத்து குறிப்பிட்ட பாடத் தேவைகளுடன்).
அல்லது
தொடர்புபட்ட பாடத்துறையில் NVQ நிலை 4 இற்கான சான்றிதழ்.
ஒவ்வொரு பாடநெறிக்கும் விரிவான நுழைவுத் தகுதிகளை உரிய நிகழ்ச்சித்திட்ட விளக்கத்தின் கீழ் காணலாம்.
மற்றும்
தொழில்நுட்பக் கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்கும்போது கணிதத்தில் C தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
நான் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும், பாடநெறிகளுக்கு இணைத்துக்கொள்ளல் நடைபெறுவது எப்போது?
மாணவர்களின் நியாயமான தேர்வை உறுதி செய்வதற்காக பட்டங்கல பல்கலைக்கழகக் கல்லூரி (UCB) ஒரு கட்டமைக்கப்பட்டதும், வெளிப்படையானதுமான இணைத்துக்கொள்ளல் நடைமுறையைப் பின்பற்றுகிறது.
- விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல் – ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவித்தல்கள் செய்தித்தாள்களிலும், உத்தியோகபூர்வ வலைத்தளத்திலும் வெளியிடப்படும். ஆர்வமுள்ள வேட்பாளர்கள் தமது விண்ணப்பங்களை இறுதி திகதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.
- தேர்வு மற்றும் தெரிவுசெய்யப்பட்டோரின் பட்டியல் – அனைத்து விண்ணப்பங்களும் தகுதி அளவுகோல்களுக்கு ஏற்ப கவனமாக மீளாய்வு செய்யப்படுகின்றன. பட்டியலிடப்பட்ட வேட்பாளர்கள் திறன்காண் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.
- உளச்சார்புத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு – விண்ணப்பதாரர்கள் உளச்சார்புத் தேர்வில் தோற்றுவதனைத் தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டத்திற்கான பொருத்தத்தை மதிப்பிடுவதற்கான நேர்முகத்தேர்வு நடைபெறும்.
- தெரிவு மற்றும் பதிவு – வெற்றிகரமான பரீட்சார்த்திகள் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பின்னர் அவர்கள் தமது பதிவுகளை பூர்த்தி செய்துகொள்ளவும், தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தபடவும் அழைக்கப்படுவார்கள்.
மாணவர் சேவைகள் – பதிவுசெய்தல் நடவடிக்கைகள் முடிவடைந்ததும், மாணவர்கள் தங்கள் மாணவர் அடையாள அட்டை, பருவகால பயணச்சீட்டுகள் மற்றும் பிற வசதிகளுக்கான அணுகலைப் பெறுவார்கள்.
டிப்ளோமா கற்கைகளுக்கான கால அளவு யாது (கால எல்லை)?
அடிப்படைமட்ட கற்கைநெறி : 02 மாதங்கள்
NVQ 5 : 1 வருடம்
OJT 01 : 06 மாதங்கள்
NVQ 06 : 1 வருடம்
OJT 02 : 06 மாதங்கள்
மொத்தம் : 03 ஆண்டுகள் & 02 மாதங்கள்
நான் ஏதேனும் கற்பித்தல் கட்டணம் செலுத்த வேண்டுமா?
🎓 கற்பித்தல் கட்டணம்
- NVQ நிலை 5 மற்றும் நிலை 6 டிப்ளோமா திட்டங்களுக்கு எந்தவொரு கற்பித்தல் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
- அனைத்து கற்கைத்திட்டங்களும் இலங்கை அரசாங்கத்தால் முழுமையாக நிதியளிக்கப்படுவதால், மாணவர்கள் தங்கள் படிப்பை இலவசமாகத் தொடரலாம்.
💵 நிதி உதவி (நிபுணதா சிசு சவிய)
தகுதியுள்ள மாணவர்கள் பின்வருவனவற்றிற்கும் விண்ணப்பிக்கலாம்:
- மாணவர் ஆதரவு அலகு (SSU) மூலம் வழங்கப்படும் உதவித்தொகைகள் – நிபுணதா சிசு சவிய
பட்டங்கல பல்கலைக்கழகக் கல்லூரியில் (UCB) பயிற்றுவிப்பு மொழி யாது?
பட்டங்கல பல்கலைக்கழகக் கல்லூரியில் (UCB), அனைத்து NVQ நிலை 5 மற்றும் நிலை 6 டிப்ளோமா திட்டங்களுக்கும் ஆங்கிலம் முதன்மையான கற்பித்தல் மொழியாகும்.
நான் என்ன தகுதியைப் பெறுவேன், அது தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டதா?
பட்டங்கல பல்கலைக்கழகக் கல்லூரியில் (UCB) தங்கள் படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்கள் இலங்கையின் தேசிய தொழிற்தகுதி (NVQ) கட்டமைப்பின் கீழ் பின்வரும் தகுதிகளைப் பெறுவார்கள்:
- NVQ நிலை 6 – உயர் தேசிய டிப்ளோமா
இந்தத் தகுதி தொழிற்கல்வி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (UoVT) மற்றும் மூன்றாம் நிலை மற்றும் தொழில் கல்வி ஆணையத்தின் (TVEC) கீழ் வழங்கப்படுகிறது; இது கல்வி மற்றும் தொழில்முறை நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது.
பட்டங்கல பல்கலைக்கழகக் கல்லூரியில் (UCB) டிப்ளோமாவைப் பூர்த்தி செய்த பின்னர் நான் பட்டப்படிப்பைத் தொடர முடியுமா?
ஆம்! பட்டங்கல பல்கலைக்கழகக் கல்லூரியில் (UCB) உங்கள் NVQ நிலை 6 உயர் தேசிய டிப்ளோமாவை முடித்த பிறகு, நீங்கள் பட்டப்படிப்புக்கான உங்கள் கல்வியைத் தொடரத் தகுதியுடையவர்.
🎓 முன்னேற்றப் பாதை
NVQ நிலை 6 ஐ வெற்றிகரமாகப் பூர்த்திசெய்யும் மாணவர்கள் தொழிற்கல்வி பல்கலைக்கழகம் (UoVT) வழங்கும் இளங்கலைப் பட்டப்படிப்புகளில் நேரடியாக நுழையலாம்.
பட்டங்கல பல்கலைக்கழகக் கல்லூரி ஒரு அரசு நிறுவனமா?
ஆம். பட்டங்கல பல்கலைக்கழகக் கல்லூரி (UCB) என்பது இலங்கையில் முழுமையாக அரசுக்குச் சொந்தமான உயர்கல்வி நிறுவனமாகும்.
இது தொழிற்கல்வி பல்கலைக்கழகத்தின் (UoVT) மேற்பார்வையின் கீழ் செயற்படுகிறது. மேலும், மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணையத்தின் (TVEC) மேற்பார்வையின் கீழ் செயற்படுகிறது – இரண்டும் கல்வி அமைச்சின் கீழ் செயற்படுகின்றன.
🏫 நிறுவனக் கண்ணோட்டம்
- வகை: அரசு நிறுவனம்
- இணைப்பு: தொழிற்கல்வி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (UoVT)
- ஒழுங்குமுறை ஆணையம்: மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணையம் (TVEC), NAITA
அமைச்சு: கல்வி அமைச்சகம், இலங்கை
UCB இல் மாணவர்களுக்கு என்ன வசதிகள் உள்ளன?
பட்டங்கலா பல்கலைக்கழகக் கல்லூரி (UCB) மாணவர்கள் கல்வி ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் வெற்றிபெற உதவும் வகையில் ஆதரவான மற்றும் நன்கு பொருத்தப்பட்ட கற்றல் சூழலை வழங்குகிறது.
🎓 கல்வி மற்றும் கற்றல் வசதிகள்
- நவீன நூலக சேவைகள் – பாடப்புத்தகங்கள், குறிப்புப் பொருட்கள் மற்றும் டிஜிட்டல் வளங்களுக்கான அணுகல்.
- திறம்படு (smart) வகுப்பறைகள் – ஊடாடும் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான கற்றலை ஆதரிக்கும் பல் ஊடகங்களால் இயக்கப்பட்ட வகுப்பறைகள்.
- தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் – கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான அதிவேக இணைய அணுகலுடன் முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வு கூடங்கள்.
- வைஃபை இணைப்பு – மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கான வளாகம் முழுவதும் வைஃபை வலையமைப்பு.
💼 மாணவர் ஆதரவு & வழிகாட்டுதல்
- தொழில் வழிகாட்டுதல் & ஆலோசனை பிரிவு – தொழில் ஆலோசனை, பயிற்சி ஆதரவு மற்றும் சுய அபிவிருத்தி ஆலோசனைகளை வழங்குகிறது.
- மாணவர் ஆதரவு பிரிவு (SSU) – கல்வி உதவியை வழங்குவதுடன், மாணவர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உதவுகிறது.
- உதவித்தொகை & நிதி உதவி – தகுதியுள்ள மாணவர்கள் தங்கள் படிப்பை இடையூறு இல்லாமல் தொடர நிதி உதவி வாய்ப்புகள்.
🌱 பல்கலைக் கழக வாழ்க்கை மற்றும் சுய அபிவிருத்தி
- பயிலரங்குகள் & கருத்தரங்குகள் – வேலைவாய்ப்பை மேம்படுத்த வழக்கமான தொழிற்துறை சார்ந்த அமர்வுகள் மற்றும் பயிற்சி திட்டங்கள்.