• +94 362 235 570
  • ucbatangala@gmail.com
  • University College of Batangala, Panawala, Eheliyagoda.

சேர்க்கை தகவல்

சேர்க்கை தகவல்

படங்கலை பல்கலைக்கழகக் கல்லூரி (UCB)  என்பது இலங்கையின் முன்னணி தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி வழங்குநர்களில் ஒன்றாகும். எங்கள் ஆட்சேர்ப்பு செயன்முறையானது வெளிப்படையானதாகவும், அணுகக்கூடியதாகவும், மாணவர்களுக்கு ஏற்றதாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அறிவிப்புக்கள்

தற்போதைய அனைத்து ஆட்சேர்ப்பு அறிவிப்புகள், விண்ணப்ப அழைப்புகள் மற்றும் இற்றைப்படுத்துதல்கள் இந்தப் பக்கத்தில் வெளியிடப்படும்.

 

புதிய ஆட்சேர்ப்புக்கள்

UCB ஆனது பொதுவாக தொழிற்கல்வி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (UoVT) கீழ் கல்வி நாட்காட்டியுடன் சீரமைக்கப்பட்ட ஆட்சேர்ப்பை நடத்துகிறது. விண்ணப்பதாரர்களுக்கு தம்மை தயார்படுத்திக் கொள்வதற்குரிய  ஆட்சேர்ப்பு அறிவிப்புகள் முன்கூட்டியே வெளியிடப்படும்.

தகுதி அளவுகோல்கள்

விண்ணப்பதாரர்கள் பின்வருவனவற்றில் ஒன்றைப் பூர்த்தி செய்ய வேண்டும்:

விஞ்ஞானம், கலை, வணிகம் அல்லது தொழில்நுட்பப் பிரிவுகளில் GCE (A/L) தகுதி (பாடத்திட்டத்தைப் பொறுத்து குறிப்பிட்ட பாடத் தேவைகளுடன்)

அல்லது

தொடர்புடைய கற்கைத் துறையில் NVQ நிலை 4 சான்றிதழ். ஒவ்வொரு பாடத்திற்கும் விரிவான நுழைவுத் தகுதிகளை அந்தந்த திட்ட விளக்கத்தின் கீழ் காணலாம்.

மேலும்

தொழில்நுட்பப் கற்கைகளுக்கு விண்ணப்பிக்கும்போது கணிதத்தில் 'C' தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.