தொழில்முறைத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (UoVT) கீழ் நிறுவப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக, பட்டங்கல பல்கலைகழகக்கல்லூரியானது, இலங்கையின் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் செயற்பட்டு வருகிறது. பல்கலைக்கழகக் கல்லூரி வழங்கும் அனைத்து கல்வித் திட்டங்களும் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணையத்தால் (TVEC) அங்கீகாரம் பெற்றவையாவதுடன், தேசிய பயிற்சி மற்றும் தொழிற்துறை பயிற்சி ஆணையத்தால் (NAITA) ஆதரிக்கப்படுகின்றன; இது வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சி மற்றும் தொழிற்பயிற்சிகள் மூலம் வலுவான தொழிற்துறை இணைப்புகளை உறுதி செய்கிறது.
இந்த ஒத்துழைப்புகள் பட்டங்கல பல்கலைக்கழகக் கல்லூரியில் பெறப்படும் ஒவ்வொரு தகுதியும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டு சர்வதேச அளவில் பொருத்தமானதாக இருப்பதை உறுதிசெய்வதுடன், பல்வேறு தொழில் வாய்ப்புகளுக்கு மாணவர்களை தயார்படுத்துகிறது.